இன்னிக்கு அதிகம் பேச்சு கிடையாது. ‘அப்பராம பக்தி எந்தோ கொப்பரா மா’ தியாகராஜர் பாடலின் பல உருவாக்கங்களைக் கேட்டு மகிழலாம். ’ராக சாகா’ தொகுப்புக்குப் பிறகு வி.ஸ்.நரசிம்மன் தன் தந்திக்குழுவினருடன் பல சங்கம இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அண்மையில் கேட்டு ரசித்தது ‘Seamless Strings’. இதைப் பற்றி பின்னர் விரிவாக எழுதவேண்டும்.
கீழுள்ளதுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக். அந்த வயலின் (யாரு?) ’மதுரமணி’ குரலையும் தாண்டுகிறது. தியாகராஜரின் ராம பக்தி போல வேதம் ஐயரின் பக்தியில் ஊறியவரது பாடலை என்ன சொல்வது?
இசைக் கலைஞர்கள் தனித்தனியே இயங்கி வந்தாலும், பல சந்தர்ப்பங்களில் ஒரே மாதிரியான ஸ்வர வரிசைகளைக் கொண்டு பாடல்களை இயற்றுகிறார்கள்.
நமக்கே சில சமயம் பாடல்களில் ஒற்றுமை கேட்கும்போதே தெளிவாகத் தெரியும்.
மேற்கிசையும், கிழக்கிசையும் பல நூற்றாண்டுகளாக கொடுக்கல்,வாங்கல் முறைகளை பல நூற்றாண்டுகளாக நடத்தி வந்துள்ளது. இதில் எந்தவழியில் அதிக பண்டமாற்று நடந்தது என வரையறுக்க முடியாது. கடந்த ஒரு நூற்றாண்டாக, இந்திய இசை முறை மேற்கில் பிரபலமாக இருந்தாலும், மும்மூர்த்திகளின் காலத்தில் ஐரோப்பா இசையை இங்கு பயின்றுவந்திருக்கிறார்கள். தஞ்சை மன்னர் காலத்தில், ஐரோப்பா குறியீடு முறையை வழவழைத்து இசை பயிற்சி செய்யும் முறை இருந்திருக்கிறது.
மதுரை மணி ஐயரின் மேற்கிசை நோட் மிகவும் பிரபலமான பாடலாகும். தன் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் கடைசிப் பகுதியான மங்களத்தில் பாடுவார். மூன்று மணிநேரங்களுக்கு குறையாமல் நடக்கும் கச்சேரிகளில், கடைசியில் பாடப்படும் மங்களம் ரசிகர்களின் (இசைக் கலைஞர்களையும் கூட) இருக்கத்தைத் தளர்த்தும் பகுதியாகும்.
சைகோவ்ஸ்கீ (Tchaikovsky) எனும் மேற்கிசைக் கலைஞர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரஷ்ய இசையமைப்பாளர். சில ஒற்றிசைவுகள் தவிர, இவர் எழுதிய வயலின் கன்சர்ட்டோ மிகப் பிரபலமானதாகும். கன்சர்ட்டோ என்பது மேற்கிசை சேம்பர் இசை வகையாகும். கன்சர்ட்டோவில், பிரதான வாத்தியமாக ஒரு கருவி இசைக்கப்படும். மீதமுள்ள வாத்தியங்கள் பல்லிசை (polyphony) பாணியில் இதனுடன் துணை போகும்.
சைகோவ்ஸ்கீ இயற்றிய வயலின் கன்சர்ட்டோ (D Major) மூன்று பகுதிகளைக் கொண்டது. இதன் மூன்றாவது பகுதி மிக விஸ்தாரமாக இயற்றப்பட்டுள்ளது. ஆனால், இதன் அடிப்படை ஸ்வர வரிசை மதுரை மணி ஐயர் பாடிய ஆங்கில நோட் முறையில் இருப்பதைக் கண்டு மிக ஆச்சர்யம் அடைந்தேன்.
ஆரன் கோப்லாண்ட் (Aaron Copland) எனும் இசைக் கலைஞரின் Fanfare for a Common Man (பொதுஜனத்துக்கான கொண்டாட்டம்) என அமெரிக்காவை முன்னிறுத்தி இயற்றப்பட்ட பாடலின் அடிப்படை We Will Rock You பாடலில் உபயோகப்படுத்தப்பட்டது.
பல சமயங்களில் Tempo எனப்படும் வேகம் மாறலாம். ஆனாலும், பல முறை கேட்டுப்பார்த்தால் ஸ்வர வரிசை, அதன் உபயோகங்கள் கொண்டு இதை சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
Recent Comments